என் வருங்கால கணவர் இப்படி தான் இருக்க வேண்டும்.., – இளசுகளுக்கு டிப்ஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா தற்போது தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஷி கண்ணா

தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ராஷி கண்ணா. அவர் நடித்த முதல் படமே செம ஹிட் அடிக்க அடுத்தடுத்து முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கில் வெளியான மனம் படத்தில் கூட சின்ன கதாபாத்திரத்தில் வந்து சென்றிருப்பார்.

மேலும் இமைக்கா நொடிகள் திரைப்படம் தான் தமிழில் முதல் படம். அதுவும் ஹிட் அடிக்க அடங்க மறு திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். இப்பொழுது துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.

மேலும் தனுஷ் மற்றும் கார்த்தி உடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் தற்போது அனைவரின் கனவுக்கன்னியாக இருக்கும் ராஷி கண்ணாவுக்கு எப்பொழுது திருமணம் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதற்கு அவர் பதிலளித்துள்ளார். அதாவது அவருக்கு திருமணம் பற்றிய எந்த திட்டமும் இல்லையாம்.

Rashi-Khanna-1
Rashi-Khanna-1

மேலும் உங்கள் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்கள் என்று கேட்டதற்கு அவர் பக்தி நிறைந்தவராகவும் அதே நேரத்தில் அனைவர்க்கும் உதவுபராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அழகு எல்லாம் அவருக்கு முக்கியம் கிடையாதாம். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் குஷியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here