Thursday, April 25, 2024

சுவையான ஸ்வீட் ரெசிபி ” ரச மலாய்” – செஞ்சு பாருங்க!!

Must Read

நம் அனைவர்க்கும் ஸ்வீட் என்றால் ரொம்ப பிடிக்கும் அதிலும் குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஒன்று என்றால் அது ஸ்வீட் தான். ஈசியாக ரஸ மலாய் எப்படி செய்றதுனு பார்ப்போம்..

தேவையான பொருட்கள்:

  • பால் – 1 லிட்டர்
  • எலுமிச்சை -1 ஸ்பூன்
  • ரவை – 1 ஸ்பூன்
  • சக்கரை – 200 கிராம்
  • குங்குமப்பூ – கொஞ்சம் போல
  • சக்கரை – 200 கிராம்
  • ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்
  • பிஸ்தா – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில், பாதி பாலை எடுத்து நன்றாக கொதிக்க வைக்கவும், அதில் எலுமிச்சை சாறு விட்டால் பால் திரிந்து வரும், பால் கொதித்ததும் அதனை தனியாக எடுத்து ஆறவைக்கவும்.
  • ஆறவைத்த இந்த கலவையை வடிகட்டி அதில் ரவையை சேர்த்து தட்டையாக தட்டி வைத்து கொள்ளவும். அதனை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  • பின்பு, ஒரு பாத்திரத்தில், சக்கரையை போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும், சக்கரை கொஞ்சம் பக்குவமான நிலையில் வந்ததும், நாம் தட்டி வைத்ததை அதில் சேர்த்து ஒரு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதனையும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
  • இப்பொது பாதாம் பால் தயாரிக்க, மற்றொரு பாத்திரத்தில், பால் , சக்கரை, குங்குமப்பூ, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக கட்டியாக வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். இந்த பால் கலவையில், நாம் தட்டி வைத்த பால் கட்டிகளை சேர்த்து மேலே பிஸ்தா தூவி விடவும்
சுவையான ” ரச மலாய்” ரெடி!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -