ஜடேஜா சுழலில் சிக்கிய தமிழ்நாடு அணி…, மீண்டு வந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

0
ஜடேஜா சுழலில் சிக்கிய தமிழ்நாடு அணி..., மீண்டு வந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!
ஜடேஜா சுழலில் சிக்கிய தமிழ்நாடு அணி..., மீண்டு வந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

ரஞ்சி டிராபியில் ஜடேஜாவின் சௌராஷ்டிரா அணி தமிழ்நாடு அணியிடம் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால், ஜடேஜா பவுலிங்கில் தனது பார்மை மீட்டு அசத்தி உள்ளார்.

ரஞ்சி டிராபி:

இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி டிராபி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தமிழ்நாடு அணியானது கடந்த 24ம் தேதி முதல் சௌராஷ்டிரா அணிக்கு எதிராக போட்டியிட்டு வந்தது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீரரான ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு முதன் முதலாக சௌராஷ்டிரா அணி சார்பாக களமிறங்கினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், இந்த போட்டி மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தமிழ் நாடு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்களை குவித்திருந்தது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய சௌராஷ்டிரா அணி 192 ரன்களுக்குள் சுருண்டது. 132 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழ்நாடு அணி 2வது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

T20 W வேர்ல்ட் கப் 2023: ஒரே தொடரில் 13 பெண் நடுவர்கள்…, ஐசிசி வெளியிட்ட நியூ அப்டேட்!!

இதனால், சௌராஷ்டிரா அணி 325 என்ற இலக்கை துரத்த களமிறங்கியது. இதில், ஹர்விக் தேசாய் (101) மட்டும் சதம் அடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற சௌராஷ்டிரா அணி 206 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் விளைவாக தமிழ்நாடு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்ற, 2வது இன்னிங்ஸில் 17.1 ஓவரில் 53 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். ஆனால், ஆல் ரவுண்டரான இவர், பேட்டிங்கில் (15, 25) தடுமாற்றத்தை கண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here