12000 ரன்களை தொட்ட இந்தியாவின் டெஸ்ட் நாயகன்…, முதல் தர கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்தை அடைந்து அசத்தல்!!

0
12000 ரன்களை தொட்ட இந்தியாவின் டெஸ்ட் நாயகன்..., முதல் தர கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்தை அடைந்து அசத்தல்!!
12000 ரன்களை தொட்ட இந்தியாவின் டெஸ்ட் நாயகன்..., முதல் தர கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்தை அடைந்து அசத்தல்!!

ரஞ்சி டிராபி தொடரில், புஜாரா ஆந்திர பிரதேச அணிக்கு எதிராக 91 ரன்கள் குவித்ததன் மூலம், அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்.

புஜாரா:

ரஞ்சி டிராபி தொடரில், ஆந்திர பிரதேச அணிக்கு எதிராக சௌராஷ்டிரா அணி விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆந்திர பிரதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த, ஆந்திர பிரதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 415 ரன்கள் குவித்திருந்தது. இந்த இலக்கை துரத்திய சௌராஷ்டிரா அணி 237 ரன்களுக்குள் சுருண்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து, 2வது இன்னிங்ஸை தொடங்கிய, ஆந்திர பிரதேச அணி 164 ரன்களில் டிக்லோர் செய்தது. இதனால், 342 ரன்கள் என்ற இலக்கை துரத்தி 192 ரன்களிலேயே ஆல் அவுட்டானது. இதன் விளைவால், ஆந்திர பிரதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் டெஸ்ட் தொடர் நாயகன் புஜாரா சௌராஷ்டிரா அணிக்காக விளையாடினார்.

தென் ஆப்பிரிக்கா T20 லீக் தொடரில் தோனி?? வெளியான நியூ அப்டேட்!!

இதில், புஜாரா முதல் இரு இன்னிங்ஸில் 5, 91 ரன்கள் எடுத்ததன் மூலம், டெஸ்டின் முதல் தர கிரிக்கெட் தொடரில், 12000 ரன்கள் கடந்துள்ளார். டெஸ்டின் 146 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ள இவர், 36 சதம் உட்பட 12016 ரன்களை குவித்துள்ளார். இதனால், இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரரானார். 186 போட்டிகளில் 14609 ரன்களுடன் வாசிம் ஜாஃபர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here