ஜடேஜாவுக்கு என்ன தான் ஆச்சு.., 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டும் தானா.., அதிர்ச்சி அடைந்த BCCI!!!

0
ஜடேஜாவுக்கு என்ன தான் ஆச்சு.., 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டும் தானா.., அதிர்ச்சி அடைந்த BCCI!!!
ஜடேஜாவுக்கு என்ன தான் ஆச்சு.., 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டும் தானா.., அதிர்ச்சி அடைந்த BCCI!!!

ரஞ்சி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்காக களமிறங்கியுள்ள ஜடேஜாவின் ஆட்டம் குறித்து வெளியாகிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜடேஜா

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் என்று சொல்லப்படும் ஜடேஜா மூட்டு வலி பிரச்சனை காரணமாக சில நாட்கள் சர்வதேச தொடர்களில் இடம்பெறாமல் இருந்தார். இந்நிலையில் வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் அவர் நீண்ட நாட்கள் எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடாமல் இருந்ததால் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என பி சி சி ஐ அறிவுறுத்தி இருந்தது. அதன்படி தமிழ்நாடு அணிக்காக களமிறங்கிய ஜடேஜா நேற்று நடைபெற்ற போட்டியில் 24 ஓவர் வீசி உள்ளார்.

ஆனால் இந்த 24 ஓவரிலும் அவர் மொத்தம் மூன்று மெய்டன்கள் உட்பட 48 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரே ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இவர் ஆடிய இந்த ஆட்டம் BCCI உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் இதே போன்ற டெஸ்ட் தொடரிலும் விளையாடினாள் இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால் ஜடேஜா இனி வரும் போட்டியில் தனது பார்மை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here