மீண்டும் ரசிகர்களை சூடேற்றிய குக் வித் கோமாளி  பிரபலம் …! – கருப்பு நிற அரைகுறை உடையில் போட்டோ ஷூட் !!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பின் பிக் பாஸ் மூலம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்தவர். சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் இளசுகளை சூடேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது  அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன்  ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்தில் தடம் பதித்தவர். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் அவை எதுவும் அந்த அளவிற்கு பெரிதாக இல்லை. இந்நிலையில் இவர் நடத்திய போட்டோ ஷூட்கள் தான் இவருக்கு இந்த இடத்தை பெற்று தந்தது என்றே கூறலாம். இவரின் இடுப்பழகை காணவே பல ரசிகர்கள் உள்ளனர். அந்த அளவிற்கு இவரின் புகைப்படங்கள் அமைந்து இருக்கும்.

அதன் மூலமாக இளைஞர் மத்தியில் பிரபலமான இவருக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அங்கு இவர் பழகும் விதம் கோமாளிகளை வேலை வாங்கும் விதம் என இவரின் செயல்கள் அனைவருக்கும் பிடிக்க வைத்தது. மேலும் புகழ் இவருடன் செய்யும் காதல் லீலைகள், லூட்டிகள் என பல நிகழ்வுகள் இவருக்கு நல்ல இடத்தை பிடித்து தந்தது. அந்த நிகழ்ச்சியில் தனது சமையல் திறமையால் 3-வது இடத்தை தட்டி சென்றார். அதன் பிறகு கலக்க போவது யாரு சீசன் – 9 நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து உள்ளார்.

இவைகளை அடுத்து பிக் பாஸ் சீசன்-4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அங்கும் தன் முத்திரையை பதித்தார். தனது  பொறுமையாலும் , பிரச்சனைகளை கையாளும் விதத்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். மேலும் திறமையாக விளையாடி  அந்த நிகழ்ச்சியில் 4-வது இடத்தையும் பிடித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனது ரசிகர்களை குஷி படுத்த அவ்வப்போது பல போட்டோ ஷூட்களை நடத்தி இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன் அடிப்படையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் கருப்பு நிறத்தில் அரைகுறை ஆடையில் வித்தியாசமான தலை வடிவமைப்பில் உள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here