கிராமத்து பாணியில் ரம்யா பாண்டியனின் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்… தூள் கிளப்பிய ட்ரைலர் வீடியோ!!!

0
கிராமத்து பாணியில் ரம்யா பாண்டியனின் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்... தூள் கிளப்பிய ட்ரைலர் வீடியோ!!!
கிராமத்து பாணியில் ரம்யா பாண்டியனின் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்... தூள் கிளப்பிய ட்ரைலர் வீடியோ!!!

பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் ரம்யா பாண்டியன். இவர் தற்போது ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.

தமிழ் வெள்ளித்திரை மூலம் சினிமாவுக்குள் நுழைந்த இவர், டம்மி பட்டாசு என்ற படத்தில் முதன் முதலாக நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த படங்கள் எதுவும் அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அமையவில்லை. இதனால் தனக்கென ரசிகர்களை உருவாக்க போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.

கிராமத்து பாணியில் ரம்யா பாண்டியனின் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்... தூள் கிளப்பிய ட்ரைலர் வீடியோ!!!
கிராமத்து பாணியில் ரம்யா பாண்டியனின் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்… தூள் கிளப்பிய ட்ரைலர் வீடியோ!!!

அதன் மூலம் இவருக்கு ரசிகர்களும் அதிகமாக கிடைத்தனர். இதன் மூலம் அவருக்கு குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் இந்த வாய்ப்புகளையும் திறன்பட பயன்படுத்தி கொண்டு தன்னை முன்னிலை படுத்தினார். தற்போது அவருக்கு ஒரு சில படவாய்ப்புகளும் வர தொடங்கி உள்ளது.

கிராமத்து பாணியில் ரம்யா பாண்டியனின் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்... தூள் கிளப்பிய ட்ரைலர் வீடியோ!!!
கிராமத்து பாணியில் ரம்யா பாண்டியனின் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்… தூள் கிளப்பிய ட்ரைலர் வீடியோ!!!

அந்த வகையில் இவர் தற்போது அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருகிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

கிராம கதையை மையாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் வாணி போஜன் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கான ட்ரைலர் வெளியாகி உள்ளது. அதன் ட்ரைலரை ரம்யா பாண்டியன் அவர்கள் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த படம் வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதையும் தனது கேப்சன் மூலம் தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here