மொட்டைமாடி போஸையே பின்னுதள்ளிய கடற்கரை போஸ் – வைரலாகும் ரம்யா பாண்டியனின் போட்டோஷூட் அட்டகாசங்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது கடற்கரையில் செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

தமிழ் திரைஉலகில் வெற்றிநடை போட்ட ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன். அதன் பிறகு சமுத்திரக்கனியுடன் இணைந்து ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் எல்லாம் ஓடியது, ரம்யா பாண்டியனுக்கு பிரபலம் கிடைக்கவில்லை.

பிறகு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பிறகு தான் இந்த படத்தில் நடித்தது இவரா?? என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரது பொறுமை, பக்குவம், சமையல் திறன் அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் ஷாக்கானார்கள்.

மேலும் ரம்யா பாண்டியனுக்கு தனி ஆர்மி உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதன் பிறகு தான் அவரின் சுயரூபமே தெரிய வந்தது. எந்த ஒரு சீரியஸான நிகழ்விலும் சிரிப்பது அடுத்தவரை கேலி செய்வது என பல அட்டகாசங்களை செய்து வந்தார் நம்ம ரம்மு.

ஆனால் கடைசி நாள் வரை பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடித்தார். தற்போது படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். மேலும் மொட்டை மாடி போட்டோஷூட் அடுத்து கடற்கரை போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளார்.

அதாவது வெள்ளை நிற அரைகுறையான உடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here