‘2011 ல 21ஜி பஸ், 2021 ல பிஎம்டபிள்யூ கார்’ – வேற லெவலில் ரம்யா பாண்டியன்!!

0

தமிழ் திரையுலகின் நடிகையான ரம்யா பாண்டியன் தற்போது ஒரு புது கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இயக்குனராக இருந்த பாண்டியனின் மகள் தான், ரம்யா பாண்டியன். இவர் முதன் முதலாக “டம்மி டப்பாசு” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார். இதனை அடுத்து இவர் தொடர்ச்சியாக, “ஜோக்கர்” திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார், ரம்யா பாண்டியன். இந்த திரைப்படத்தில் நன்றாக நடித்ததால் தான் இயக்குனர் சமுத்திரக்கனி இவரை “ஆண்தேவதை” திரைப்படத்தில் நடிக்க கேட்டாராம்.

குக் வித் கோமாளியின் இறுதி சுற்றில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?? கண்கலங்க வைத்த நிகழ்வு!!

 

இப்படியாக இருக்க, ரம்யா பாண்டியனின் ஆரம்ப கால வாழ்க்கையில் இவர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இவர் சத்யம் திரையரங்கில் வெறும் 1500 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சென்றுள்ளராம். இதனை அவரே ஒரு முறை கூறினார்.

இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக தான். அதன் பிறகு தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது ரம்யா பாண்டியன் புதிதாக ஒரு பிஎம்டபிள்யூ காரை வாங்கி உள்ளார். இந்த விஷயத்தை அவரது தம்பி பரசு பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு 21 ஜி பேருந்தில் சென்ற தனது அக்கா 2021 ஆம் ஆண்டில் ஒரு பிஎம்டபிள்யூ காரை சொந்தமாக வாங்கியுள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here