தலைகீழாக தம்கட்டி அமர்ந்த ரம்யா பாண்டியன் – இவருக்குள்ள இப்படி ஒரு திறமையா?? அசந்து போன ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது தனது ஒட்டுமொத்த திறமையையும் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

ஜோக்கர் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன். அதன் பிறகு தான் சமுத்திரக்கனி உடன் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் அவருக்கு ஹிட் கொடுக்காததால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார்.

அவரிடம் இருந்த பக்குவமும் பொறுமையும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதிலும் அவர் வெளியிட்ட மொட்டை மாடி போட்டோஷூட் வேற லெவெலில் வைரலானது.

இந்நிலையில் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அனைவருக்கு பிடித்தவராக இருந்த ரம்யா பாண்டியன் தனது சுயரூபத்தை காட்ட அனைவரும் அதிர்ந்து போயிருந்தனர்.

இவ்வளவு அமைதியா?? என்று நினைத்த பலர் விஷ பாட்டில் என்று திட்ட ஆரம்பித்தனர். ஆனாலும் 100நாட்கள் வரை வீட்டில் தாக்கு பிடித்தார் ரம்யா. ஆரிக்கும் இவருக்கும் இடையே பல பிரச்சனைகள் உருவானது.

என்ன சொல்வதென்றாலும் சிரித்து கொண்டே பேசிவிட்டார். இதுதான் அனைவரையும் வெறுக்க வைத்தது. வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா பல போட்டோஷூட் என எடுக்க ஆரம்பித்து விட்டார்.

மேலும் யோகா போன்ற சாகசங்களிலும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள யோகாசனம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here