தை அமாவாசை: சென்னை உள்பட இந்த பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து., நாளை (பிப்.8) இயக்கம்..

0

தமிழகத்தில் தை அமாவாசை உள்ளிட்ட தினங்களில், மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். குறிப்பாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கடற்கரையில் திதி கொடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் நாளை மறுநாள் (பிப்ரவரி 9) தை அமாவாசை வர இருப்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு நாளை (பிப்.8) சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பெங்களூர், கோவை, சேலம் ஆகிய இடங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் எளிய பயணங்களை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சம்பள சர்ச்சை குறித்து மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா.. அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனவா பேசுவீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here