நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைப்பு – ரமேஷ் பொக்ரியால் முடிவு..!

0

9 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார்.

பாடச் சுமை குறைப்பு..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மார்ச் 16ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுத் தேர்வுகளை மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு அவர்களின் முந்தைய மதிப்பெண் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வேலை நாட்கள் குறைப்பாலும் பாடத் திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கை எழுந்து வந்தது. இதனிடையே நடப்புக் கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாடத்திட்டம் மற்றும் பாடவேளைகள் குறைக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியிருந்தார்.

கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை நிச்சயமாக நடத்த வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சகம்!!

இந்நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு வரை 30% சிபிஎஸ்இ பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவால் நாட்டில் நிகழும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாடச் சுமையை குறைக்க 1,500 கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துக்களை பரிசீலித்து பாடச்சுமை குறைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here