ஒரே நாளில் ஜேஇ.இ & என்.டி.ஏ தேர்வுகள் – அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்!!

0
HRD Minister Ramesh Pokhriyal
HRD Minister Ramesh Pokhriyal

ஒரே நாளில் ஜேஇஇ மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஜேஇ.இ & என்.டி.ஏ தேர்வு..!

ஜேஇ.இ மெயின் தேர்வு வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 6ம் தேதி தேசிய பாதுகாப்பு அகாடமி (என்.டி.ஏ) தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. இதனால் இரு தேர்வுகளிலும் பதிவு செய்துள்ள மாணவர்கள் இரண்டிலும் எழுத முடியாத சூழலில் உள்ளனர். இதனால் ஏதேனும் ஒரு தேர்வை வேறு தேதியில் வைக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.

தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த தடை – அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

ரமேஷ் பொக்ரியால் ட்வீட்..!

Minister Ramesh Pokhriyal
Minister Ramesh Pokhriyal

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், ஜேஇஇ மெயின் தேர்வு எழுதும் மாணவர்கள் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வையும் எழுத பதிவு செய்துள்ள சூழலில் நிலைமையை ஆராய்ந்து சிக்கல் ஏற்படாதவாறு முடிவெடுக்கப்படும். இதனால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை இரு தேர்வுகளையும் மாணவர்கள் எழுதும் வகையில் ஆராய்ந்து முடிவெடுக்க தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here