அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி – குவியும் நன்கொடைகள்!!

0

அயோத்தியில் தற்போது புகழ்மிக்க ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளுக்காக தற்போது பல தரப்பினரிடம் இருந்து நன்கொடைகள் வந்த வண்ணமாக உள்ளது. எவ்வளவு நன்கொடை வந்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ராமர் கோவில்:

அயோத்தியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அன்று மோடி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த கோவில் 3 மாடிகள் மற்றும் 5 குவிமாடங்களை பெற்று இருக்கும். மேலும் 300 தூண்கள் மற்றும் 360 அடி நீளம், 235 அடி அங்குலம், 161 அடி உயரத்தை பெற்றிருக்கும் இந்த கோவிலை கட்டுவதற்கு சுமார் ரூ.1,100 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று ராமஜென்ம பூமி தீர்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து ராமர் கோவிலை கட்டுவதற்கு மக்களிடம் நன்கொடை திரட்டி வந்தனர். இதனை கடந்த மாதம் 15ம் தேதி அன்று துவக்கினர். முதல் நபராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ரூ.5 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும் நன்கொடை திரட்டும் பணி வரும் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

#INDvsENG 2வது டெஸ்ட் – இரட்டை சதத்தை தவறவிட்ட ரோஹித் சர்மா!!

இந்நிலையில் நன்கொடை குறித்து ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ராமர் கோவிலை கட்டுவதற்கு தேசமே நன்கொடை வழங்கி வருகிறது. இதுவரை சுமார் ரூ.1,511 கோடி ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here