Thursday, April 25, 2024

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் – ராமதாஸ் 

Must Read

கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தொற்றை தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நிலவரம் 

தமிழ்நாட்டில் முதல் கொரோனா தொற்றானது மார்ச் 7-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பின், இரு மாதங்கள் கழித்து, தமிழகத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை 5,409 – ஆக உயர்ந்தது. ஆனால், இரு மாதங்களில் இந்த எண்ணிக்கையை விட ஆயிரத்திற்கும் மேலான தொற்றுகள் நேற்று ஒரே நாளில் ஏற்பட்டுள்ளன. இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுவது சென்னையிலிருந்து குறுக்கு வழிகளில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பலர் தொற்று ஆய்வு செய்து கொள்ளாமல் மற்றும் அவர்களை தனிமை படுத்தி கொள்ளாமல் இருந்தவையே. அதன் விளைவாக, அவர்கள் இருக்கும் பகுதிகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாகவே உள்ளன.

இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை

தேவையின்றி வெளியில் செல்லவதை தவிர்க்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம், தமிழக அரசு ஆகியவை எச்சரித்தும் பெரும்பான்மையினர் அதனை பின்பற்றவில்லை. தொழிலாளர்களுக்கு 1 மாதத்திற்கான இ – பாஸ் – தமிழக அரசு முடிவு..! ஒரு கை தட்டினால் ஓசை வராது, இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை எழும் என்பதை மக்கள் உணர வேண்டும்.

மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் 

கொரோனா தொற்று நோய்ப் பரவலைத் தடுக்க மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தால்,  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப் பட்டிருக்கும். அவ்வாறு நிகழாததிற்கு காரணம் பொதுமக்களின்  ஒத்துழைப்பின்மையே என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், தொற்று பரவலை ஒழிக்கும் பணிகளுக்குத் துணை நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -