படத்தில் நடிக்க ஆசைப்பட்டு விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – நலம் விசாரித்த ரசிகர்கள்!!

0

ரன், சண்டைக்கோழி, பையா, வேட்டை போன்ற ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்தவர் இயக்குனர் லிங்கு சாமி. ஆனால் இவருக்கு சமீப காலமாக பெரிதாக படங்கள் ஒன்றும் அமையவில்லை. இதனாலேயே ஒரு பெரிய ஹீரோவை வைத்து ஒரு மாஸ் படத்தை எடுக்க லிங்கு சாமி திட்டமிட்டுள்ளார்.

இதனால் டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார் ஆன அல்லு அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்தது. அவர் கால்ஷீட் தராததால் நடிகர் ராம் பொத்னேனி ஹீரோவாக ஒப்பந்தம் ஆனார்.படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. இதனால் ஹீரோ ராமும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் அடிபட்டு தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார். ரசிகர்களும் இந்த செய்தி அறிந்து அவரை நலம் விசாரித்து வருகின்றனர். அவர் திரும்பி வந்து மீண்டும் படப்பிடிப்பை தொடக்க மொத்த படக்குழுவும் காத்துக்கொண்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here