ரத்த அழுத்தம் காரணமாக ஹைதெராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரஜினிகாந்த்:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் ரஜினிக்கு அரசியல் கட்சி சார்ந்த வேலைகள் இருப்பதால், முதலில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்றே அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் நேற்று இரவு அல்லது இன்று காலை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் ஹைதெராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவானையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரை காண யாரும் வரவேண்டாம், அவர் நலமாக உள்ளார் என்றும் அவரது மகள் ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார். மேலும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட முதல் அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் அவருக்கு ரத்த அழுத்த கோளாறு சரியாகும் வரை மருத்துவமனையில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாரதிக்கு வேறு ஒரு பொண்ணோட கல்யாணம் ஆகிருச்சாமே?? சாந்தியின் கேள்விக்கு சௌந்தர்யாவின் பதிலடி!!
தற்போது இன்று காலையில் அப்பல்லோ மருத்துவமனை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் எனவும் கூறியுள்ளனர். மேலும் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பயப்படும் அளவுக்கு அவருக்கு ஒன்னும் இல்லை, மேலும் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் தான் உள்ளார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.