ரஜினிகாந்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்!!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாள் அன்று ரசிகர்கள் ரஜினியின் மாறுபட்ட கதாபாத்திரத்தின் வேடம் அணிந்து ரஜினி வீடு முன்பு வாழ்த்து தெரிவிக்க காத்திருந்தனர். ஆனால் ரஜினிகாந்த் வீட்டில் இல்லாததால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

ரஜினி பிறந்தநாள்:

நடிகர் ரஜினியின் 70-வது பிறந்தநாளை இன்று ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அவர் அரசியலுக்கு வருவது குறித்த அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இன்று அவர் பிறந்தநாள் அன்று அவருடைய 168 படமான அண்ணாத்த குறித்த அப்டேட் வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சூப்பர் ஸ்டார் ரஜினி 1950-ஆம் ஆண்டு பிறந்தார். இன்று 70-வைத்து பிறந்தநாள் காணும் அவருக்கு பிரதமர் மோடி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Rajnikanth
Rajnikanth

மேலும் ரசிகர்கள் ரஜினியின் பாட்ஷா, அருணாச்சலம், சிட்டி, பாபா போன்ற படங்களில் கதாபத்திரங்களில் வேடம் அணிந்து ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் இல்லம் முன்பாக குவிந்தனர் இதனால் வீடு முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் ரஜினிகாந்த் வீட்டில் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here