சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் அஜித் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

0
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் அஜித் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் அஜித் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

திரையுலகில் பல பிரபலங்களுக்கு பிடித்த ஒரு நடிகர் என்றால் அது ரஜினிகாந்த். 90ஸ்-ல் தொடங்கிய இவருடைய நடிப்பு போர் தற்போது வரை நீண்டு கொண்டு தான் இருக்கிறது. வயசானாலும் அவருடைய ஸ்டைலும் அழகும் இன்னும் அவரை விட்டு போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல் படத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினி நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க இருக்கிறாராம். அதுமட்டுமின்றி ட்ரெண்டிங்க் ஸ்டார் ஃபஹத் ஃபாசில் மற்றும் தெலுங்கு நடிகர் நானி லீடு ரோலில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக ரஜினிகாந்துடன் சேர்ந்து அமிதாப்பச்சனும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் முன்னணி நடிகருக்கு அம்மாவாகும் நடிகை திரிஷா.., கொந்தளித்த நெட்டிசன்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here