விரைவில் சந்திப்போம்….,ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு…..,

0
விரைவில் சந்திப்போம்....,ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு.....,
விரைவில் சந்திப்போம்....,ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு.....,

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள 169 ஆவது திரைப்படம் ‘ஜெயிலர்’. ஆக்ஷன் காமெடி வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி உடன் இணைந்து நடிகை தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா, ஹைதராபாத், மங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ‘ஜெயிலர்’ படத்திற்கான படப்பிடிப்பு இன்று முடிவடைந்துள்ளது.

KPY தீனாவுக்கு நடந்த கோலாகல திருமணம்….,வைரலாகும் புகைப்படங்கள்…..,

இந்த நிகழ்வை நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட அந்த படத்தில் பணியாற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here