தலைவர் 169 படத்தின் கதைக்களம் இதுதான் – டைட்டிலுடன் வெளியான மிரட்டல் அப்டேட்!!

0
தலைவர் 169 படத்தின் கதைக்களம் இதுதான் - டைட்டிலுடன் வெளியான மிரட்டல் அப்டேட்!!
தலைவர் 169 படத்தின் கதைக்களம் இதுதான் - டைட்டிலுடன் வெளியான மிரட்டல் அப்டேட்!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 169 படத்தின் கதை மற்றும் டைட்டில் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் அப்டேட் :

நடிகர் ரஜினி தனது அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை, நெல்சன் இயக்குவதில், சிக்கல் எழுந்துள்ளதாக சமீப காலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரஜினி படத்தை இயக்கப் போவது நெல்சன் தான் என்ற தகவல் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்ட பலர் நடிக்க போவதாக பேசப்படுகிறது.

இதையடுத்து, படத்தின் கதை தயாராகி விட்டதாகவும், ஜூலை இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இதுபோக, இந்த படம் சிறை மற்றும் சிறை கைதிகள் சம்பந்தப்பட்டது என்றும் படத்தின் தலைப்பு ஜெயிலர் என வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here