தர்பார் தரமான படம் – ரசிகர்கள் கருத்து

0
Darbar Poster

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் “தர்பார்”. இன்று ரசிகர் காட்சி, கொண்டாட்டங்கள் என திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களும் திருவிழாக்கோலம் ஆக ரசிகர் வெள்ளத்துடன் காட்சியளிக்கிறது.

பர்ஸ்ட்ஹாப் தாறுமாறு

தர்பார் படத்தின் முதல் பகுதி தாறுமாறாக உள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அனிருத்தின் இசை தெறிக்கிறது எனவும் சிவாஜி படத்திற்கு பிறகு ரஜினிக்கு சிறப்பான படமாக இது அமையும் எனவும் தெரிவித்துள்ளனர். ரஜினி – நிவேதா தாமஸ் இடையிலான செண்டிமெண்ட் காட்சிகள் அனைத்தும் அருமை. சந்தோஷ் சிவன் கைகளால் சிறப்பான ஒளிப்பதிவு என படம் தரமாக உள்ளது.

மொத்தத்தில் படம் எப்படி

படத்தின் இரண்டாம் பாகம் சிறிது மெதுவாக நகர்ந்தாலும் ரசிக்கும் படியாகவே உள்ளது. மொத்தத்தில் படம் பக்கா #rajinism என படம் பார்த்த திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here