ஐந்தாம் நாளில் அதள பாதாளத்திற்கு சென்ற அண்ணாத்த படத்தின் வசூல் – என்ன காரணம் தெரியுமா?

0

நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தின் ஐந்தாவது நாளான நேற்று இதன் வசூல் முற்றிலும் குறைந்துள்ளது.

வசூல் குறைவு:

நடிகர் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்மையில் ரிலீசான படம் அண்ணாத்த.  கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம் பயங்கர வரவேற்பை பெற்றது.  இந்த படம் வெளியான முதல் நாளே 70 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதன் இரண்டாவது நாள் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது.  இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக பெரு மழை பெய்து வருகிறது.  இதனால், இந்த படத்தின் வசூல் முற்றிலும் குறைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இந்த படம் ரிலீஸாகி ஐந்தாவது நாளான நேற்று வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here