அசாம் தேசிய பூங்காவிலும் ராஜீவ்காந்தி பெயர் நீக்கமா? – வரலாற்றை அழிக்கும் முயற்சி என காங்கிரஸ் குற்றச்சாட்டு!!

0

அசாமில் உள்ள ஒரு பூங்காவில் சூட்டப்பட்டுள்ள ராஜீவ் காந்தியின் பெயரை மத்திய அரசு நீக்கியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

வரலாற்றை அழிக்கும் செயல்:

இந்திய விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் உயர்ந்த விருதான `ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது’ என்ற பெயரை, `மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது’ என மத்திய அரசு சில நாட்களுக்கு முன் பெயர் மாற்றம் செய்தது. இதையடுத்து, நாட்டின் முன்னாள் பிரதமராகவும், அரசியலில் மிகப்பெரிய தவிர்க்க முடியாத ஆளுமை நிறைந்த நபராக இருந்தவரின் பெருமையை சீரழிக்கும் விதமாக இந்த அறிவிப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சி கண்டனம்  தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் ஓரங்க் என்ற இடத்தில் தேசிய பூங்கா உள்ளது. இந்த தேசிய பூங்கா ராஜீவ் காந்தி தேசிய பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்தது.  இந்த பூங்காவில் பெங்கால் புலிகள் அதிக அளவில் உள்ளன.  பிரம்மபுத்திரா நதியின் வடக்கு கரையோரம் அமைந்துள்ள இந்த பூங்காவானது 79.28 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. 1992-ம் ஆண்டு ராஜீவ் காந்தி தேசிய பூங்கா என்ற பெயர் ஓரங்க் வனவிலங்கு சரணாலயம் என மாற்றப்பட்டது. அதன்பின் 2001-ம் ஆண்டு பதவியேற்ற அப்போதைய அரசு  மீண்டும் ராஜீவ் காந்தி தேசிய பூங்கா என மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, நேற்று நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் பூங்காவின் பெயரிலிருந்து, ராஜீவ்காந்தி பெயரை நீக்கி,  ஓரங்க் தேசிய பூங்கா என மீண்டும் பெயர் மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த பெயர் மாற்றம் ஓரங்க் என்ற பழங்குடியின மக்களின் கோரிக்கையை முன்வைத்து நடந்திருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்த நிலையில், சம்பந்தப்பட்ட பழங்குடியின மக்கள் இதை மறுத்துள்ளனர்.  இதனால், வரலாற்றை அழிக்கும் செயலில் பாஜக அரசு தீவிரம் காட்டி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here