பாலைவனச் சோலையில் ஒரு கல்விச்சேவை.. நடமாடும் ஒட்டக வண்டியில் நூலகம் – தொண்டு நிறுவனம் அசத்தல்!

0

ராஜஸ்தானில் உள்ள ஒரு தன்னார்வ அமைப்பு நடமாடும் ஒட்டக வண்டியில் நூலகத்தை அமைத்து, கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கல்வி சேவை வழங்கி வருகிறது.

நடமாடும் கல்விச்சேவை:

நாடெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸால் பல மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.  குழந்தைகளின் கல்வி முழுமையாக பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.  இந்த நிலையில், வசதி படைத்த குழந்தைகள் ஆன்லைன் வழியாக கல்வி பயின்று வருகின்றனர்.  அரசாங்கத்தால் கல்வி சேனல்கள் நடத்தப்பட்டு வந்தாலும் கிராமப்புற மாணவர்களுக்கு இந்த கல்வி முறை எட்டாக்கனியாக மட்டுமே இருந்து வருகிறது.


இந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் ஒரு சில பகுதியில், சரியான சாலை வசதிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் கிடையாது. மேலும், வறட்சியான அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்களாக உள்ளனர். வறுமையில் வாடும் அந்த மக்களின் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் புத்தகத்தை கையில் கூட தொட்டது கிடையாது.  அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றும் புதிய முயற்சி ஒன்றை ஒரு தனியார் தொண்டு நிறுவனம் கையில் எடுத்துள்ளது.


அதாவது, இந்த சூழ்நிலைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, இதனை மாற்றி அமைக்கும் விதமாக, அந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒட்டகத்தில் நூலகத்தை அமைத்து கிராமங்கள் தோறும் சென்று கல்விச் சேவை புரிந்து வருகிறது. உலகெங்கும் பரவியுள்ள கொரோனா  வைரசால் தங்கள் படிப்பை மறக்கும் தருவாயில் உள்ள நலிவடைந்த கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் இந்த நடமாடும் ஒட்டக நூலகத்தாலும், இவர்களின் கல்விச்சேவையாலும் மிகுந்த பயனை அடைந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here