புதிய சீரியல் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட ‘ராஜா ராணி’ சஞ்சீவ் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
ஆலியா, சஞ்சீவ் இடையே வெடித்த பிரச்சனை - சண்டைக்கு காரணம் இதுதான்! இணையத்தில் பகீர் தகவல்!!
ஆலியா, சஞ்சீவ் இடையே வெடித்த பிரச்சனை - சண்டைக்கு காரணம் இதுதான்! இணையத்தில் பகீர் தகவல்!!

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமான சஞ்சீவ் தற்போது சன் டிவியில் நடிக்க இருக்கும் சீரியல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சீவ்

ராஜா ராணி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சஞ்சீவ். இவர் ஆரம்பத்தில் குளிர் 100 டிகிரி என்ற படத்தில் நடித்திருந்தவர். பள்ளி மாணவனாக தனது நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருப்பார். அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சின்ன சின்ன படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் யாவும் ஹிட் கொடுக்கவில்லை.

இந்நிலையில் தான் அவருக்கு ராஜா ராணி வாய்ப்பு கிடைத்தது. அதில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். ரசிகைகள் கனவு நாயகனாக வலம் வந்தார். இவருக்கு ஆலியா மானசா ஜோடியாக நடித்திருந்தார். இருவருக்கும் ஜோடி பொருத்தம் ஒத்து போக நிஜ வாழ்க்கையிலும் இணைந்தனர். வீட்டில் பல பிரச்சனைகளை தாண்டி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆலியா தற்போது ராஜா ராணி 2 வில் நடித்து வருகிறார். சஞ்சீவ் எப்பொழுது நடிக்க களமிறங்குவார் என பலரும் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தனர். இந்நிலையில் தான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடிக்கவுள்ளார். அதற்கான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here