‘இந்த வயசுல உனக்கு எதுக்கு தேவையில்லாத ஆசை’ – பைக் வாங்க ஆசைப்படும் சரவணனை கேவலப்படுத்தி பார்க்கும் ‘ராஜா ராணி’ குடும்பம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் தற்போது சரவணன் பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை பட வீட்டில் உள்ள அனைவரும் கிண்டல் செய்கின்றனர்.

ராஜா ராணி

ராஜா ராணி சீரியல் நேற்று சந்தியா சரவணன் குடும்பத்துடன் படத்திற்கு செல்ல அங்கு சந்தியா கண்ணில் தூசி பட்டதை சரவணன் எடுத்து விடுவதை பார்த்து சிவகாமி வேறு மாதிரியாக நினைத்து சண்டைபோட்டு அழைத்து வருகிறார். இதனால் சரவணன் சந்தியா அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.

raja rani

அதன்பிறகு சந்தியா தனியாக உட்கார்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க சரவணன் வந்து சமாதானம் செய்கிறார். அடுத்ததாக சிவகாமி ரவியிடம் தியேட்டரில் நடந்ததை பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார். மேலும் இரண்டு பேரும் ஒண்ணா இருந்தா எனக்கென்ன வலிக்குது, நான் அப்படி பண்ணி இருக்க கூடாது என்று புலம்பிக்கொண்டே தூங்கி விடுகிறார்.

காலையில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க சரவணன் வந்து தான் பைக் வாங்க இருப்பதாக சொல்கிறார். அதனைக் கேட்ட செந்தில் மற்றும் ஆதி கிண்டல் செய்து சிரிக்கின்றன. இந்த வயதில் உனக்கு இந்த ஆசை தேவையா அதெல்லாம் நடக்காது, கியர் இல்லாத வண்டியை வாங்கி ஓட்டு என்று சொல்கின்றனர்.

என் பையனுக்கு என்ன அவன் எந்த வண்டினாலும் ஓட்டுவான் என்று சொல்கிறார்.  மேலும் சந்தியா ஆதியை தனியாக அழைத்து எதுக்கு இப்படி எல்லாம் பேசுற என்று கேட்கிறார். அதற்கு அப்படிதான் பேசுவேன் சரவணன் அண்ணாவால கண்டிப்பா இது முடியவே முடியாது, இந்த வயசுல எதுக்கு ஆசைப்படணுமோ அதுக்குத்தான் ஆசைப்படணும் என்று திமிராக பேசுகிறார்.

அடுத்ததாக சந்தியா சரவணனுக்கு சாப்பாடு கொண்டு போக எப்பொழுது வண்டி வாங்க போறீர்கள் என்று கேட்கிறார் அதில் கொஞ்ச நாள் ஆகட்டும் என்று சொல்ல இல்ல இப்பவே வாங்கி ஆகணும் என்று சொல்லி அழைத்து செல்கிறார். இதோடு எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here