எங்க அப்பா, அம்மானா எனக்கு 20 வருஷமா உயிர், உனக்காக அவங்களை என்னால விட முடியாது.., அர்ச்சனா வெளியிட்ட அதிரடி பதிவு!!

0
ராஜா ராணி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய அர்ச்சனா - வெளியான ஷாக்கிங் காரணம்!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் அர்ச்சனா தற்போது ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

ராஜா ராணி அர்ச்சனா

ராஜா ராணி சீரியலில் வில்லியாக தனது முரட்டுத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் தான் அர்ச்சனா. நடிப்புடன் சேர்ந்து அதிக குழந்தை தனமும் இருக்கும். நாயகன் நாயகியை விட அர்ச்சனா, செந்தில் ஜோடி தான் அதிக பிரபலமடைந்து வருகிறது.

தன் தங்கை வாழ்க்கைக்காக சொந்த வீட்டிலேயே சூனியம் வைத்து வருகிறார். இது தெரிந்த செந்தில் இனிமேல் அர்ச்சனாவுடன் வாழ மாட்டேன் என்று கோவமாக செல்ல சந்தியா தான் செந்திலை சமாதானப்படுத்தினார். அந்த நன்றி கூட இல்லாமல் அர்ச்சனா மீண்டும் சந்தியாவை பழி வாங்க ஏதேதோ திட்டம் போட்டு வருகிறார்.

இதனால் தான் அர்ச்சனாவை அனைவருக்குமே பிடித்து போனது. வில்லியாக சீரியலில் அங்கீகாரம் பெற்று விட்டார். ஷார்ட் பில்ம்களில் இவரை கதாநாயகியாக பார்த்த அனைவர்க்கும் இந்த வில்லி கொஞ்சம் புதிதாக இருந்தாலும் தனது தேர்ந்த நடிப்பால் நிலையான இடத்தை பெற்று விட்டார்.

மேலும் ரீல்ஸ் செய்வதில் இவரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது என்றே சொல்லலாம். ஏனெனில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தத்ரூபமாக நடித்திருப்பார் அர்ச்சனா. லவ் சாங்காக இருந்தாலும் சரி, காமெடியாக இருந்தாலும் சரி உடனுக்குடன் நடிப்பதில் வல்லவர். இந்நிலையில் தான் தற்போது அர்ச்சனா அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற டயலாக்கிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here