குடும்பத்தை மட்டும் விட்டு கொடுத்தீங்கனா நான் சும்மாவே இருக்க மாட்டேன் – சரமாரியாக பேசிவிட்ட ராஜா ராணி அர்ச்சனா!!!

0

ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனா தற்போது சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தின் முக்கிய டயலாக்கிற்கு சூப்பராக ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்.

ராஜா ராணி:

ராஜா ராணி சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. அதாவது தற்போது சந்தியா மீது எந்த குற்றமும் இல்லை என்பதை சரவணன் நிரூபித்து விட்டார், அர்ச்சனா தான் நகையை திருடவில்லை என்று என்னன்னவோ ஆட்டம் போட்டார். வீட்டை விட்டே வெளியேறுவதாகவும், தப்பே செய்யாத என்னை குற்றவாளியாக நிறுத்தியுள்ளதாகவும் சொல்லி அத்தனை ஆட்டம் போட்டார். இதனை நம்பி சிவகாமியும் சந்தியா மெது சந்தகப்பட கடைசி நேரத்தில் போனில் இருந்த ஆதாரத்தை காட்டி சந்தியா மீது தவறு இல்லை என்பதை நிரூபித்து விட்டார்.

 

மேலும் சிவகாமி சந்தியாவை மருமகளாகவும் ஏற்றுக்கொண்டார். இந்த எபிசாரோடு தான் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வில்லியாக நடிக்கும் வி.ஜே.அர்ச்சனா தனது அருமையான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். மேலும் இவரால் தான் கதையே சூடுபிடிக்கவும் ஆரம்பித்துள்ளது. இப்படி இருக்க தற்போது அவர் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சூரரை போற்று படத்தில் அபர்ணாவின் பேமஸ் டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here