சரவணனிடம் வம்புக்கு நிற்கும் அர்ச்சனா.., IPS ட்ரைனிங்கில் சந்தியா வெற்றி பெறுவாரா?? பரபரப்பான ராஜா ராணி 2!!

0
சரவணனிடம் வம்புக்கு நிற்கும் அர்ச்சனா.., IPS ட்ரைனிங்கில் சந்தியா வெற்றி பெறுவாரா?? பரபரப்பான ராஜா ராணி 2!!
சரவணனிடம் வம்புக்கு நிற்கும் அர்ச்சனா.., IPS ட்ரைனிங்கில் சந்தியா வெற்றி பெறுவாரா?? பரபரப்பான ராஜா ராணி 2!!

ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா அர்ச்சனா குழந்தை பேர் வைக்கும் நிகழ்ச்சிக்கு வருவாரா ?? மாட்டாரா?? என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் செந்தில் அவசர அவசரமாக சாப்பிட்டு வெளியே கிளம்புகிறார். பின் அர்ச்சனா, சிவகாமி இருவரும் பேசிக்கொண்டிருக்க சரவணன் அங்கு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது அர்ச்சனா, சரவணனிடம் சந்தியா பங்ஷனுக்கு வரமாட்டாளாமே என கேட்டு பிரச்சனை செய்கிறார். ஆனால் சரவணன் அர்ச்சனாவுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து போய் விடுகிறார். இதனால் சிவகாமி அர்ச்சனாவிடம் எதுக்கு இப்படி பிரச்சனை செய்கிற என திட்டுகிறார். மறுபுறம் சந்தியா கௌரி மேடமிடம் லீவு கேட்டு பார்ம் கொடுக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இனிமேல் இது நடக்காது.., எல்லாமே மொத்தமா மாறிடுச்சு.., ரசிகர்கள் ஷாக்!!

ஆனால் கௌரி மேடம் நான் தான் உனக்கு லீவு கொடுக்க முடியாதுன்னு சொன்னேன்ல. அப்புறம் எதுக்கு ஃபார்ம கொண்டு வந்து கொடுக்கிற என திட்டி கோபமாக அந்த பார்மை கிளித்து போடுகிறார். இதற்கு சந்தியா எதுவும் பேச முடியாமல் அமைதியாக வெளியே வந்து விடுகிறார். பின் சரவணனுக்கு கால் செய்து நடந்த விஷயங்களை சொன்னால் அவர் வருத்தப்படுவார் என சந்தியா எதுவும் சொல்லாமல் சந்தோஷமாக பேசுகிறார். பிறகு IPS பயிற்சியாளர்கள் அனைவருக்கும் தண்ணீர் நிரப்பும் போட்டி வைக்கப்படுகிறது.

ஆனால் சந்தியா மீது ஏற்கனவே பிளாக் மார்க் இருப்பதால் இந்த போட்டியில் சிறந்த பர்பாமன்ஸ் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதன்படி சந்தியாவும் இந்த டாஸ்கை எப்படியாவது செஞ்சு நல்ல மார்க் எடுக்க வேண்டும் என முயற்சி செய்கிறார். ஆனால் அப்துல் உங்களால இந்த டாஸ்கை செய்ய முடியாது. இது ரொம்ப கஷ்டம் எனவே நீங்கள் இதிலிருந்து விலகிக் போங்க எனக் கூறுகிறார். ஆனால் சந்தியா என்னால் முடியும் கண்டிப்பாக நான் இதை சரியாக செய்வேன் என விவாதம் செய்கிறார். கடைசியில் அப்துல், சந்தியா டாஸ்கை செய்ய ஒப்புக் கொள்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here