கிடைத்த வாய்ப்பில் சந்தியாவை அசிங்கப்படுத்திய அர்ச்சனா.., சப்போர்ட் செய்யும் சிவகாமி.., இன்றைய ராஜா ராணி 2 !!

0
கிடைத்த வாய்ப்பில் சந்தியாவை அசிங்கப்படுத்திய அர்ச்சனா.., சப்போர்ட் செய்யும் சிவகாமி.., இன்றைய ராஜா ராணி 2 !!
கிடைத்த வாய்ப்பில் சந்தியாவை அசிங்கப்படுத்திய அர்ச்சனா.., சப்போர்ட் செய்யும் சிவகாமி.., இன்றைய ராஜா ராணி 2 !!

சந்தியா ஹோட்டலில் பிரச்சனை செய்த வீடியோ வைரலாகிய நிலையில் இன்றைய எபிசோட்டில் சிவகாமி எடுக்கும் முடிவால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 இன்றைய எபிசோடில் சந்தியா ஹோட்டலில் பிரச்சனை செய்த வீடியோ அனைத்து நியூஸ் சேனல்களிலும் வைரலாகிறது. இதனை சிவகாமியின் அக்கம் பக்கத்து வீட்டினர் பார்த்துவிட்டு உன் மருமக என்ன இப்படி குடிச்சிட்டு ஆட்டம் போடுறா உண்மையிலே நீ ரொம்ப பாவம் சிவகாமி என நக்கலாக பேசுகின்றனர். இதைக் கேட்டு அர்ச்சனாவும் வழக்கம்போல் சந்தியாவை பற்றி இல்லாத பொல்லாததை சொல்லி சிவகாமியிடம் ஏத்தி விடுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் சிவகாமி அதை எதையும் நம்பாமல் சந்தியாவுக்கு போன் போட்டு வீடியோ கால் செய்யும்படி கூறுகிறார். வீடியோ காலில் சந்தியா என் மீது எந்த தப்பும் இல்லை என சிவகாமியிடம் சொல்கிறார். சிவகாமி உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு சந்தியா. நீ யார் சொல்றதையும் பத்தி கவலைப்படாமல் உன்னோட IPS ட்ரைனிங்கில் கவனம் செலுத்து என ஆறுதல் கூறுகிறார். இதை கேட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோசப்படுகின்றனர். மறுநாள் அர்ச்சனாவின் அம்மா, அப்பா வீட்டுக்கு வந்து குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியை எங்கு வைக்கலாம் என பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பெரிய மஹாலில் ஃபங்க்ஷனை நடத்த வேண்டும் என அர்ச்சனா சொல்கிறார்.

சும்மா தளுக்கு மொலுக்குனு தளதளன்னு இருக்கீங்களே கிரண்.., தத்தளித்து போன இளவட்டங்கள்!!

ஆனால் சிவகாமி முதல் வாரிசு வீட்டில் உள்ள பெரியவங்க ஆசிர்வாதம் கிடைக்கணும். அதனால நம்ம வீட்டிலேயே குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவை நடத்தலாம் என சொல்கிறார். பிறகு இந்த ஃபங்ஷனுக்கு சந்தியா உட்பட எல்லாரும் வரணும் என அர்ச்சனா சொல்கிறார். இதனால் சிவகாமி சரவணனிடம் சந்தியா எப்படியாவது இந்த பெயர் சூட்டு விழாவுக்கு வரணும் என சொல்ல சரவணன் இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் யோசித்து கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here