சந்தியாவால் சிவகாமி குடும்பத்துக்கு வந்த அசிங்கம்.., சிவகாமி எடுக்கப்போகும் முடிவு என்ன?? பரபரப்பான ராஜா ராணி 2!!

0
சந்தியாவால் சிவகாமி குடும்பத்துக்கு வந்த அசிங்கம்.., சிவகாமி எடுக்கப்போகும் முடிவு என்ன?? பரபரப்பான ராஜா ராணி 2!!
சந்தியாவால் சிவகாமி குடும்பத்துக்கு வந்த அசிங்கம்.., சிவகாமி எடுக்கப்போகும் முடிவு என்ன?? பரபரப்பான ராஜா ராணி 2!!

ராஜா ராணி 2 இன்றைய எபிசோடில் சந்தியா குடித்துவிட்டு ஹோட்டலில் பிரச்சனை செய்த வீடியோ சிவகாமிக்கு தெரிய வரும் நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 இன்றைய எபிசோடில் சந்தியா, ஜோதி, சேட்டன் மூவரும் ஹோட்டலில் தகராறு செய்த வீடியோ அனைத்து நியூஸ் சேனல்களிலும் ஒளிபரப்பாகிறது. இதை பார்த்த IPS ஆபீஸர் உடனடியாக அனைவருக்கும் மீட்டிங் போடுகிறார். அந்த மீட்டிங்கில் ஆபீஸர் தப்பு செஞ்ச நீங்களா முன்னாடி வந்துட்டா பனிஷ்மென்ட் குறையும் என சொல்கிறார். உடனே சந்தியா, ஜோதி, சேட்டன் மூவரும் முன் வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சந்தியா நடந்த பிரச்சனையை எடுத்துச் சொல்ல எவ்வளவு முயற்சித்தும் கொஞ்சம் கூட அந்த ஆபீஸர் காது கொடுத்து கேட்கவில்லை. மறுபக்கம் அர்ச்சனாவிடம் ஜெசி வந்து ஏதோ கேட்க பிறகு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது. அப்போது அர்ச்சனா ஆதியை கேவலமாக பேச அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜெசி பதிலுக்கு பேசுகிறார். பிறகு சத்தம் கேட்டு வரும் சிவகாமி உங்க ரெண்டு பேருக்கும் இடையில் என்னதான் பிரச்சனை, எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க என சொல்லி திட்டுகிறார்.

ஹேமாவை காப்பாற்றும் கண்ணம்மா.., வெளிவரும் டிஎன்ஏ டெஸ்ட்.., இறுதி கட்டத்தை நோக்கி பாரதி கண்ணம்மா சீரியல்!!

பிறகு சந்தியா சரவணனுக்கு கால் செய்து அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்கிறார். இதற்கு சரவணன் ஆறுதல் சொல்லிவிட்டு, ஆபிஸரிடம் முடிஞ்ச வரை உங்கள் மீது எந்த தப்பும் இல்லை என்று பேசி பாருங்கள் என சொல்கிறார். இந்த விஷயத்தை சிவகாமியிடம் சொல்ல வருகிறார் சரவணன். ஆனால் அதற்கு பக்கத்து வீட்டுப் பெண்கள் வந்து சிவகாமியிடம் உன் மருமகள் சென்னையில் குடித்துவிட்டு ஆட்டம் போடுகிறார். உண்மையிலே நீ ரொம்ப பாவம் சிவகாமி என சொல்கின்றனர். சிவகாமி இதைக்கேட்டு ஒன்னும் புரியாமல் அப்படியே அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here