செந்திலை காப்பாற்ற சரவணன் எடுத்த முடிவு.., சிவகாமி செய்யப்போவது என்ன? பரபரப்பில் ராஜாராணி 2!!

0
செந்திலை காப்பாற்ற சரவணன் எடுத்த முடிவு.., சிவகாமி செய்யப்போவது என்ன? பரபரப்பில் ராஜாராணி 2!!
செந்திலை காப்பாற்ற சரவணன் எடுத்த முடிவு.., சிவகாமி செய்யப்போவது என்ன? பரபரப்பில் ராஜாராணி 2!!

ராஜா ராணி 2 சீரியலில் செந்தில் தனது அப்பா பேச்சையும் மீறி சங்க தேர்தலில் நிற்க போவதாக சொல்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

ராஜா ராணி 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 இன்றைய சீரியலில் ரவி செந்திலிடம், சங்க தேர்தலில் நிற்க வேண்டாம் என எவ்வளவோ எடுத்துச் சொல்கிறார். ஆனால் இதை கொஞ்சம் கூட அர்ச்சனாவும், செந்திலும் கேட்காமல் தேர்தலில் நிற்க போவதாக கூறி விடுகின்றனர். அடுத்து ரவி, சரவணனிடம் சென்று தேர்தலில் இருந்து நீ விலகி விடலாமே? என கேட்க செந்தில் தவறான பாதையில் போறான் அவனை காப்பாற்ற நிச்சயம் தேர்தலில் நிற்பேன் என கூறுகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மறுபுறம் சந்தியாவுக்கு ட்ரைனிங் இல்லாததால் எல்லோரும் ஷாப்பிங் செல்கின்றனர். அப்போது சரவணனுக்கு ஃபோன் போட சரவணன் தேர்தலுக்கு நாமினேஷன் செய்ய போகும் விஷயத்தை சொல்கிறார். இதற்கு சந்தியா வாழ்த்துக்களை கூறுகிறார். அடுத்ததாக செந்தில், சரவணன் இருவரும் அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு நாமினேஷன் செய்ய கிளம்புகின்றனர்.

அடேங்கப்பா.., “தளபதி 67” படத்துக்காக லோகேஷ் செய்த தந்திரம்.., வெளியான சுடசுட அப்டேட்!!

செந்தில் கிளம்பவும் சரவணன் தனது அம்மா அப்பாவிடம் உங்களுக்கு நான் தேர்தல்ல நிக்கிறது புடிக்கலைன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும், எனக்கு செந்திலை காப்பாற்ற வேற வழி தெரியல என சொல்லிவிட்டு செல்கிறார். பிறகு சிவகாமி, ரவி இருவரும் தனது பிள்ளைகளை நினைத்து வருத்தப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here