சந்தியாவின் உயிருக்கு வர இருக்கும் பேராபத்து.., தவறாக புரிந்துகொள்ளும் செந்தில் அர்ச்சனா.., சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!!

0
சந்தியாவின் உயிருக்கு வர இருக்கும் பேராபத்து.., தவறாக புரிந்துகொள்ளும் செந்தில் அர்ச்சனா.., சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!!
சந்தியாவின் உயிருக்கு வர இருக்கும் பேராபத்து.., தவறாக புரிந்துகொள்ளும் செந்தில் அர்ச்சனா.., சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!!

ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்டில் சைக்கிள் பயிற்சி கொடுக்க புதிதாக ஒருவர் வந்திருக்கிறார். இந்த பயிற்சியாளர் அனைவருக்கும் சைக்கிள் போட்டிக்கான விதிமுறைகளை சொல்கிறார். அடுத்ததாக எல்லாரையும் தாங்கள் தேர்வு செய்த சைக்கிளுடன் போட்டிக்கு தயாராக சொல்லுகிறார். ஆனால் சந்தியா தேர்வு செய்த சைக்கிள் நம்பர் மாறியுள்ளதாக கம்பளைண்ட் செய்கிறார்.

அதற்கு பயிற்சியாளர் கடைசி நேரத்தில் ஒன்னும் பண்ண முடியாது. அதே சைக்கிளை ஓட்டுங்க என கூறுகிறார். அந்த நேரத்தில் சக போட்டியாளர்களில் ஒருவர் சந்தியாவின் சைக்கிளில் உள்ள போல்டை கழட்டி விடுகிறார். இதனால் என்ன விபரீதம் நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. பின்னர் சைக்கிள் ரேஸ் நடத்தப்படுகிறது. இந்த சைக்கிள் ரேஸ் போட்டியை சரவணன் வீடியோ காலில் பார்த்து கொண்டிருக்கிறார்.

கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த அளவிற்கு நெருக்கம் காட்டும் அமீர்-பாவனி.., லைக்ஸ்களை குவிக்கும் கிளிக்ஸ்!!

பிறகு அனைவரும் போட்டி போட்டு கொண்டு முதலிடம் பிடிப்பதற்காக சைக்கிளை ஓட்டி செல்கின்றனர். சந்தியா மனதிற்குள் எப்படியாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார். மறுபுறம் சிவகாமியிடம் ஆதி, ஜெசி இருவரும் பியூட்டி பார்லருக்கு கடை பார்த்து வைத்திருப்பதாக கூறுகிறார். அதற்கு சிவகாமி சரவணன் வரவும் அந்த கடையை பார்த்து விட்டு அட்வான்ஸ் கொடுக்கலாம் என சிவகாமி சொல்லுகிறார். பிறகு ஆதி குடும்ப செலவுக்கு சிவகாமியிடம் பணம் கொடுக்கிறார்.

இதை வாங்கிக் கொள்ளும் சிவகாமி நீ இப்படி பொறுப்பாக இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்கிறார். ஆனா ஜெசி இதை பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமா இருக்கு என சொல்கிறார். பிறகு அர்ச்சனா செந்திலிடம் சங்க தேர்தல் பதவிக்கு நிற்கிறதை அத்தையிடம் சொல்லவேண்டாம் என சொல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனா வீட்டிற்குள் செல்லும் போது சிவகாமி நம்ம மகனுக்கு சங்க தேர்தல் பதவி கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு என பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனா அர்ச்சனா செந்தில் இருவரும் நம்மள பத்தி தான் பேசுறாங்க என தவறாக புரிந்து கொள்கின்றனர். ஆனால் அவர்கள் சரவணன் பத்தி தான் பேசுறாங்கனு தெரிஞ்சா என்ன பூகம்பம் வெடிக்க போகுது என்று அடுத்து எபிசோடுகளில் தான் தெரிய வரும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here