அப்துலை தோற்கடித்த சந்தியா.., தேர்தலில் பின் வாங்க நினைக்கும் சரவணன்.., பரபரப்புடன் ராஜா ராணி 2!!

0
அப்துலை தோற்கடித்த சந்தியா.., தேர்தலில் பின் வாங்க நினைக்கும் சரவணன்.., பரபரப்புடன் ராஜா ராணி 2!!
அப்துலை தோற்கடித்த சந்தியா.., தேர்தலில் பின் வாங்க நினைக்கும் சரவணன்.., பரபரப்புடன் ராஜா ராணி 2!!

ராஜா ராணி 2 சீரியலில் ஒரு புறம் சந்தியாவின் IPS ட்ரைனிங் அமோகமாக நடக்க, மறுபுறம் சங்கத் தேர்தலால் அண்ணன், தம்பி இருவரும் மோதிக்கொள்கின்றனர் .

ராஜா ராணி 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்டில் கபடி போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் சந்தியா அதிரடியாக விளையாடி அப்துல் ஆட்டத்திற்கு ஆப்பு வைக்கிறார். இந்த போட்டியில் தோல்வி அடைந்த அப்துல் போயும் போயும் இவளிடம் தோல்வி அடைந்து விட்டோமே? என ஆத்திரமடைகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மறுபக்கம் சங்க தேர்தலை எப்படி சமாளிப்பது என சரவணன் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். அப்போது பார்த்து சந்தியா கால் செய்து போட்டியில் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியாக சரவணனிடம் சொல்கிறார். இதற்கு சரவணன் வாழ்த்துக்களை சொல்கிறார். அதற்கு சந்தியா ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க நீங்க இப்படி பேசுற ஆள் கிடையாதே? என கேட்கிறார்.

பிரபல சேனலுக்கு ரீ என்ட்ரி கொடுத்த ஸ்லீப்பிங் ஸ்டார்.., அப்போ TRP எகிற போகுது!!

அதற்கு சரவணன் தேர்தலில் செந்தில் நிற்பதை எப்படி சமாளிக்க போறேன் என்று தெரியல என கூறுகிறார். பிறகு சந்தியா எந்த காரணத்தை கொண்டும் நீங்க தேர்தலில் பின் வாங்க கூடாது என சொல்ல சரவணன் இப்போதுதான் எனக்கு கொஞ்சம் ஆறுதலா? இருக்கு என கூறுகிறார். பிறகு இரு மகன்கள் தேர்தலில் நிற்பதை நினைத்து சிவகாமி கவலைப்படுகிறார். இதனால் என்ன சண்டை வரப்போகுது என்று தெரியவில்லை என புலம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here