நடுரோட்டில் மல்லுக்கட்டும் ஆதி-செந்தில்.., குடும்பத்தை நினைத்து பரிதவிக்கும் சிவகாமி.., வெளியாகி ராஜா ராணி 2 ப்ரோமோ!!

0
நடுரோட்டில் மல்லுக்கட்டும் ஆதி-செந்தில்.., குடும்பத்தை நினைத்து பரிதவிக்கும் சிவகாமி.., வெளியாகி ராஜா ராணி 2 ப்ரோமோ!!
நடுரோட்டில் மல்லுக்கட்டும் ஆதி-செந்தில்.., குடும்பத்தை நினைத்து பரிதவிக்கும் சிவகாமி.., வெளியாகி ராஜா ராணி 2 ப்ரோமோ!!

ராஜா ராணி 2 சீரியலில் ஒருபுறம் சந்தியாவின் IPS ட்ரைனிங், மறுபுறம் சரவணன் செந்தில் மோதிக் கொள்ளும் சங்க தேர்தல் என பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த விஷயத்துக்கு இப்போது வரை முடிவு கிடைக்காத நிலையில் தற்போது புது பூகம்பம் ஒன்று வெடித்துள்ளது. அதாவது இப்போது வெளியாகிய ப்ரோமோவில் ஆதி ஜெசி இருவரும் பார்லர் வைப்பதற்காக ஒரு கடையை பார்த்து வைக்கின்றனர்.

இது என்னடா லவ் டுடே பட நிகிதாவுக்கு வந்த சோதனை.., கெரியர் Starting-லையே இப்படி மோதலா??

ஆனால் அதே கடையை அர்ச்சனா, செந்திலும் வாங்க முடிவு செய்கின்றனர். இந்நிலையில் ஆதி,ஜெசி, சரவணன், சிவகாமி இவர்கள் அனைவரும் கடை முதலாளியிடம் அட்வான்ஸ், வாடகை பற்றி பேச செல்கின்றனர். அப்போது பார்த்து அர்ச்சனா செந்திலும் கடை பற்றி விசாரிக்க வருகின்றனர். இதை பார்த்த சிவகாமி இங்க என்ன பண்றீங்க என கேட்கிறார். அதற்கு அர்ச்சனா இந்த கடையை வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என சொல்லுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை கேட்ட ஜெசி நாங்க தான் இங்க பார்லர் திறக்க போறோம் என கூறுகிறார். இதனால் ஜெசி, அர்ச்சனா இருவரும் வாக்குவாதம் செய்கின்றனர். பிறகு கடுப்பான ஆதி அர்ச்சனாவை எதிர்த்து பேசுகிறார். இதை பார்த்த செந்தில் நடுரோடு என்று கூட பார்க்காமல் தம்பியை அடிக்க கை ஓங்குகிறார். சரவணன், சிவகாமி இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கின்றனர். இதன் பிறகு என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here