தனது வெற்றி பயணத்தை கொண்டாடும் ராஜா ராணி 2 சீரியல் நடிகர்கள் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

ராஜா ராணி 2 சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது 200 எபிசோடுகள் கடந்து சாதனை புரிந்துள்ளது. அதை அனைத்து நடிகர்களும் இணைந்து கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியல் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆலியா மானசா மற்றும் சித்து நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். விஜய் டிவியில் ஏற்கனவே வெளியான ‘என் கணவன் என் தோழன்’ சீரியலின் ரீமேக் தான் ராஜா ராணி 2.

ரீமேக் தான் என்றாலும் இந்த சீரியல் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதில் அர்ச்சனா வில்லியாக நடித்து வருகிறார். சந்தியா தான் எப்படியாவது ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று கனவுடன் இருக்க தனது அண்ணன் கட்டாயத்தால் சரவணனை திருமணம் செய்து கொள்கிறார்.

இதனால் திருமணம் ஆகி சென்ற வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. சந்தியா அனைத்து விதத்திலும் பொறுத்து போகிறார். அவர் படித்தவர் என்பதற்காக வீட்டில் அவரை படாத பாடு படுத்தியும் அவர் அங்கிருந்து செல்ல இல்லை. இந்த வீட்டில் வாழ்ந்தே தீருவேன் என்று இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது சரவணனும் சந்தியாவிடம் முறைத்து கொண்டிருக்க மீண்டும் சந்தியா செய்வதறியாது தவித்து கொண்டுள்ளார். இதனாலேயே சீரியல் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. தற்போது சீரியல் ஆரம்பித்த சில நாட்களிலேயே இந்த அளவிற்கு ஹிட் அடித்துள்ளது.

அதாவது 200 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் சாதனை புரிந்துள்ளது. இதனால் அந்த சீரியலில் நடிக்கும் அனைவரும் கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here