சந்தியா மீண்டும் வீட்டிற்கு வந்தது பிடிக்காமல் பொறாமையில் துடிக்கும் அர்ச்சனா – காதலில் மிதக்கும் சரவணன்!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியாவும் சரவணனும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஆரம்பிக்க இன்றைய எபிசோடு முழுக்க ஒரே ரொமான்ஸ் காட்சிகள் தான்.

ராஜா ராணி 2

சந்தியாவை புரிந்துகொண்டு குடும்பமே அவர்களை வரவேற்கிறது. சந்தியா இந்த குடும்பத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்று அனைவரும் சொல்ல அப்பொழுது தான் சிவகாமி அனைத்தையும் புரிந்து கொள்கிறார்.

இதுவரையிலும் சந்தியா திரும்பி வர வேண்டும் என்று அழுது கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு இதனால் கோவம் ஏற்படுகிறது. சந்தியா ரூமில் சரவணனுக்காக காத்து கொண்டுள்ளார்.

சரவணன் வந்து பாயில் படுப்பாரா அல்லது பெட்டில் படுப்பாரா என்று சந்தியாவிற்கு குழப்பமாக உள்ளது. சரவணனுக்கு அதே குழப்பம் தான். எப்படி இதை சொல்வது என்று யோசித்து கொண்டுள்ளார். சந்தியா தனது சின்ன வயது அனுபவம் அனைத்தையும் சரவணனிடம் ஜாலியாக பகிர்ந்து கொள்கிறார்.

சந்தியாவின் சந்தோசத்தை பார்த்து சரவணனும் பூரிப்படைகிறார். சந்தியாவை சரவணன் ரசிக்க சரவணனை சந்தியா ரசிக்க ஒரு மினி ரொமான்ஸ் சீன் அரங்கேறியது.

அர்ச்சனாவிற்கு சந்தியா திரும்ப வந்தது புடிக்கவே இல்லை. அவ வீட்டை விட்டு போனது மனசுக்கு கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனால் அவ இல்லனா நம்ம பண்ற தப்பை கண்டு பிடிக்க ஆள் இருக்க மாட்டாங்க என்று சொல்கிறார்.

செந்தில் இதை கேட்டு கோவமடைகிறார். அடுத்ததாக சந்தியா தன் அண்ணனுக்கு கால் செய்து பேசுகிறார். சரவணனை வழக்கத்திற்கு மாறாக பார்த்து பார்த்து கவனிக்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here