ராஜா ராணி 2 – பாஸ்கரை பிடித்திருப்பதாக சரவணனிடம் ஒத்துக்கொள்ளும் பார்வதி – திருமணத்திற்கு சம்மதிக்கும் சிவகாமி!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது பார்வதி நடந்த அனைத்து விஷயங்களை பற்றி சரவணனிடம் சொல்லி விடுகிறார். மேலும் அர்ச்சனா பார்வதி கல்யாணத்தை நடத்த விடாமல் தடுக்க பல வேலைகளை செய்து வருகிறார்.

ராஜா ராணி 2

சரவணன் சந்தியா கோவிலில் பேசியதை பற்றியே நினைத்துக்கொண்டுள்ளார். அப்பொழுது பார்வதி அங்கு வந்து தனியாக பேச வேண்டும் என்று சொல்ல சரவணன் தனியாக அழைத்து செல்கிறார்.

2 மாதங்களுக்கு முன்பாக பாஸ்கர் அர்ச்சனா அண்ணியின் தங்கையை பெண் பார்க்க வந்ததாகவும், அப்பொழுது என்னை பார்த்து பிடித்து போனதையும் சொல்கிறார்.

தான் எவ்வளவு திட்டியும் பாஸ்கர் விலகாமல் தொடர்ந்து தான் வேண்டும் என்று உறுதியாக இருப்பதை பற்றியும் சொல்கிறார். விக்கி போன்ற ஆள் இருக்கும் இடத்தில் பாஸ்கர் போன்ற மனிதரும் இருக்கிறார்கள் என்றும் சரவணனிடம் கூறுகிறார்.

தனக்கு பாஸ்கரை பிடித்திருப்பதாகவும் சொல்கிறார். சரவணனும் பாஸ்கர் வீட்டில் சென்று விசாரிக்கிறார். அதன் பிறகு அர்ச்சனா செந்தில் பாஸ்கர் வீட்டிற்கு செல்கின்றனர். இந்த கல்யாணத்தை நிறுத்த அர்ச்சனா ஏதேதோ பேச செல்ல அதை அவர்கள் வேறு விதமாக புரிந்து கொள்கின்றனர்.

இதற்கு மேல் பேசி பலனில்லை என்று அங்கிருந்து கிளம்புகிகிறார். இந்த கல்யாணத்தை கண்டிப்பாக நிறுத்துவேன் என்று சொல்கிறார். அதன் பிறகு சிவகாமி சாப்பிட்டு கொண்டிருக்க சரவணன் வந்து பாஸ்கர் விஷயத்தை பற்றி சொல்கிறார். பாஸ்கர் நல்ல பையன் என்று எடுத்து சொல்கிறார்.

பார்வதியும் நீங்க யாரை சொல்றிங்களோ அவங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்கிறார். அதன் பிறகு சிவகாமி இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். அர்ச்சனாவுக்கு மிகவும் கோவமாக வருகிறது. சரவணன் பாஸ்கர் வீட்டிற்கு கால் செய்து சொல்ல அவர்கள் நாளைக்கே நிச்சயம் வைத்து கொள்ளலாம் என்று சொல்கின்றனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here