வெட்டி பேசும் என் குணத்தை கட்டி போட்டு சாந்தம் ஆக்குறியே.., மனம் திறந்த விஜய் டிவி அர்ச்சனா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனா தற்போது சூப்பரான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஜா ராணி அர்ச்சனா

ராஜா ராணி சீரியலில் தற்போது சிவகாமி சந்தியாவின் உண்மையான குணத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார். மேலும் சரவணன் இத்தனை நாட்கள் சந்தியாவிற்கு உறுதுணையாக இருந்து விட்டு கடைசி நேரத்தில் சந்தியா தனது தோழியுடன் பேசியதை தவறாக புரிந்து கொண்டு தனக்குளேயே புழுங்கி வருகிறார்.

இதனால் என்ன பிரச்சனை வர போகிறது என்றும் தெரியவில்லை. இப்படி இருக்க இந்த சீரியலில் அர்ச்சனா தான் படு வில்லியாக பல வேலைகளை செய்து வருகிறார். சிவகாமியிடம் மாட்டியும் அடங்காமல் சந்தியாவை பழி வாங்க வேண்டும் என்று அலைந்து கொண்டுள்ளார்.

இவரால் தான் இந்த சீரியல் அதிக சுவாரசியமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இவர் ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானவர். மேலும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்தவர். பல முயற்சிகளுக்கு பிறகு தான் அர்ச்சனாவிற்கு ராஜா ராணி வாய்ப்பு கிடைத்தது.

ராஜா ராணியில் சந்தியாவை விட அர்ச்சனாவுக்கு தான் அதிக ரசிகர்களும் உள்ளனர். இன்ஸ்டா பாக்கத்தில் பல பலோவர்ஸ் பெற்று கொடிகட்டி பறந்து கொண்டுள்ளார். தற்போது சிங்கம் படத்தின் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார். அந்த விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here