ராஜா ராணி 2 அர்ச்சனாவிற்கு இவ்வளவு அழகான அக்காவா?? ரெண்டு பெரும் செய்ற அட்டகாசத்தை பாருங்களே!!

0
உனக்கு கோபம் வருதா இல்லையா?? வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!
உனக்கு கோபம் வருதா இல்லையா?? வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!

விஜய் டிவியில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனா தனது சொந்த அக்காவுடன் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளார். இவருக்கு இவ்வளவு அழகான அக்காவா?? என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

ராஜா ராணி அர்ச்சனா

ராஜா ராணி சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இத்தனை நாட்கள் அர்ச்சனா எல்லா வேலைகளையும் செய்து விட்டு சந்தியா மீது அனைத்து பழிகளையும் போட்டு தப்பித்தார். சிவகாமியும் சந்தியா மீது இருக்கும் கோவத்தில் அர்ச்சனா சொன்ன அனைத்தையும் நம்பினார்.

ஆனாலும் சரவணன் சந்தியாவின் மீது போடப்பட்ட அனைத்து பழியில் இருந்தும் கைப்பற்றினார். சிவகாமிக்கு இது சுத்தமாக பிடிக்கவும் இல்லை. சந்தியா எப்படியும் சரவணனை விட்டு பிரிந்து விடுவார் என்ற பயத்துடனேயே இருக்கிறார் சிவகாமி.

சந்தியா தான் அப்படி இல்லை என்று எப்படி நிரூபித்தும் சிவகாமி தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்று நிற்கிறார். இது அர்ச்சனாவுக்கு சாதகமாக போக சந்தியாவை எப்படியும் பழி வாங்கியே தீருவேன் என்று நிற்கிறார்.

கடைசியில் நகையை திருடிய பழியையும் சந்தியா மீது போட கடைசி நேரத்தில் ஆதாரம் கிடைத்து அர்ச்சனா சிக்கி கொண்டார். இப்படி சீரியலை விறுவிறுப்பாக்குவதில் அர்ச்சனாவுக்கு அதிக பங்கு உள்ளது. இவர் ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இந்நிலையில் தான் அவருக்கு ராஜா ராணி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது துறுதுறுப்பான நடிப்பால் மக்கள் மனதை கொள்ளை கொண்டார். இந்நிலையில் இவர் தனது அக்காவுடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamடர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here