தட்கல் முன்பதிவில் ரயில்வேத்துறை திட்டமிட்டே சதி செய்கிறது?? வெளியான பகீர் தகவல்!!!

0
தட்கல் முன்பதிவில் ரயில்வேத்துறை திட்டமிட்டே சதி செய்கிறது?? வெளியான பகீர் தகவல்!!!
தட்கல் முன்பதிவில் ரயில்வேத்துறை திட்டமிட்டே சதி செய்கிறது?? வெளியான பகீர் தகவல்!!!

நாடு முழுவதும் பேருந்து, விமானம் என போக்குவரத்துகள் செயல்பட்டாலும், பெரும்பாலானவர்கள் ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் தானோ என்னவோ? பல்வேறு வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது என பலரும் புலம்புகின்றனர். அடுத்ததாக, பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக விநியோகிக்கப்படும் தட்கல் டிக்கெட்களை நம்பி நகர்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் காலை 10 மற்றும் 11 மணி அளவில் திறக்கப்படும் தட்கல் முன்பதிவில் பயணிகளின் விவரங்களை பூர்த்தி செய்வதற்குள் சர்வர் முடங்கி விடுகிறது. பின்னர் தட்கல் டிக்கெட் முடிவடைந்து பிரீமியம் தட்கல் முன்பதிவு ஓபன் ஆகிவிடுகிறது. இதில் எவ்விதமான சர்வர் பிரச்சினை இல்லாமல் முன்பதிவு செய்ய முடிகிறது. இதற்கு இருமடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதால் ரயில்வே துறைக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

அட., நம்ம சிம்புவுக்கு இப்படி ஒரு துரோகமா? அவரே கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

இதற்காக தான் ரயில்வே துறை திட்டமிட்டே தட்கல் முன்பதிவில் குளறுபடி செய்கிறதா? என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. இதற்கு பதிலளித்த ரயில்வே நிர்வாக அதிகாரி, “தட்கல் முன்பதிவில் ஒரே நேரத்தில் பலரும் முயற்சி செய்வதால் தான் சர்வர் முடங்கி விடுகிறது. இது போன்ற பிரச்சினை இல்லாமல் டிக்கெட் வழங்குவது ரயில்வே துறையில் கடமை. இதை உணர்ந்து இனி வரும் காலங்களில் இந்த பிரச்சனை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here