10 நாட்களில் 2,600 சிறப்பு பயணியர் ரயில்கள் – ரயில்வே துறை முடிவு..!

0
Train
Train

இந்தியாவில் அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்து உள்ளார்.

ரயில் மருத்துவமனைகள்:

இந்தியாவில் 5 ஆயிரம் ரயில் பெட்டிகள் சிறப்பு கொரோனா மருத்துவமனைகளாக 80 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாக வினோத்குமார் தெரிவித்து உள்ளார். ரயில்வே தொழிற்சாலை மூலம் தினமும் 1.4 லட்சம் லிட்டர் சானிடைசர்கள், 1.6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உடைகள் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், தினமும் 4 பிபிஇ கிட்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் ஜூன் 1 முதல் நாள்தோறும் 200 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த மே 15ம் தேதி டெல்லியில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது போன்று அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில்களில் ஊரடங்கிற்கு முன் வசூலிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் எனவும், மூத்த குடிமக்களுக்கான எவ்வித சலுகை கட்டணமும் இல்லை என தெரிவித்து உள்ளார். இதன் மூலம் வயதானவர்கள் வெளியில் வருவதை தடுக்க முடியும் என கூறியுள்ளார்.

கோரிக்கை ரயில்:

தங்களது மாநிலத்திற்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தால் இயக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 22 வரை 97 லட்சம் டன் உணவு தானியங்கள் சரக்கு ரயில்கள் மூலம் தடையின்றி கொண்டு சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதாக வினோத்குமார் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here