
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களின் பயணத்திற்காக ரயில் சேவையை தேர்தெடுத்து வருகின்றனர். மேலும் இரயில் கட்டணம் மற்ற போக்குவரத்து சேவை கட்டணத்தை விட குறைவாக இருப்பதும் இதற்கான முக்கிய காரணமாகும். இப்படி இருக்கையில் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு போதுமான சேவையை உறுதி செய்வதற்காக கூடுதல் ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் ரயில் டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள இ – டிக்கெட்டுகள் முறையை ரயில்வே துறை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் இதில் ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் பயனர்கள் கண்டிப்பாக தங்களின் பயண சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ள வேண்டியது கட்டாயம் எனவும் ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.