காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் – தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த ராகுல் காந்தி!!

0
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் - தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த ராகுல் காந்தி!!

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதிகமான வசதிகள் செய்து தரப்படும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி:

தமிழகத்தில் கடைசியாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் இயங்கும் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்தது. இருப்பினும் மக்கள் நல்வாழ்க்கைக்காக ஆங்காங்கே நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. இதனை தொடர்ந்து குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக எல்லா கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அகமதாபாத்தில் நடந்த பேரணியில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது அவர் கூறியதாவது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், கொரோனாவின் போது உயிரிழந்தவர்களுக்கு ரூ 4 லட்சம் நிதி உதவியும், பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ 5 மானியம் கொடுக்கப்படும், குறிப்பாக வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு 3 லட்சம் வரை உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உறுதி அளித்து உள்ளார். அதுமட்டுமின்றி ஆட்சியை பிடித்த பிறகு நாங்கள் உறுதி அளித்ததை முதல் கட்டமாக அமல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here