‘தயவு செஞ்சு உங்க கண்ணாடிய எடுத்துட்டு பாருங்க’ – பிரதமரை கடுமையாக விமர்சிக்கும் ராகுல் காந்தி!!

0

நதிகளில் மனித உடல்கள் அடித்து செல்லப்படுகிறது அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொரோனா நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்து வருகின்றனர், இவை அனைத்தையும் பிரதமர் தனது கண்ணாடியை எடுத்துவிட்டு பார்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி:

இந்தியாவில் தினசரியாக கொரோனா பாதிப்பின் கொரோன தாண்டவத்தால் பல தரப்பு மக்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி பணிகள் விரிவுபடுத்தப்பட்டும் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருக்கிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தற்போது நதிகளில் மனித உடல்கள் மிதந்து செல்கிறது. அதுமட்டுமல்லாமல் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நீண்ட வரிசையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்காக இலவச சேவை வழங்கும் ஓலா – அந்த மனசு தான் சார் கடவுள்!!

மேலும் மக்கள் வாழ்க்கை பாதுகாப்புக்கான உரிமையும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் பிரதமர் தனது இளஞ்சிவப்பு கண்ணாடியை எடுத்துவிட்டு பார்க்கவேண்டும். மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தை தவிர மற்ற சம்பவங்களும் பிரதமர் கண்களுக்கு தெரிய வேண்டும் என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here