IND vs ENG 2024: விராட் கோலி அணிக்கு திரும்புவாரா?? இல்லையா?? டிராவிட் பதிலால் குழம்பிய ரசிகர்கள்!!!

0
IND vs ENG 2024: விராட் கோலி அணிக்கு திரும்புவாரா?? இல்லையா?? டிராவிட் பதிலால் குழம்பிய ரசிகர்கள்!!!

சர்வதேச இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 2வது போட்டி கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி முதல் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய இந்திய அணியினர் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டிடம் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அணிக்கு திரும்புவாரா?? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிராவிட், விராட் கோலி குறித்த கேள்வியை நீங்கள் தேர்வுக்குழுவினரிடம் கேட்டால்தான் சரியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் நாங்கள் விராட்டை தொடர்பு கொண்டு அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பதை உறுதி செய்வோம் என கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here