ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமாருக்கு விதித்த புதிய கட்டுப்பாடு…, ராகுல் டிராவிட் ஓபன் டாக்!!

0
ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமாருக்கு விதித்த புதிய கட்டுப்பாடு..., ராகுல் டிராவிட் ஓபன் டாக்!!
ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமாருக்கு விதித்த புதிய கட்டுப்பாடு..., ராகுல் டிராவிட் ஓபன் டாக்!!

இந்தியாவின் 360 டிகிரி நாயகனான சூர்யகுமார் யாதவ் டி20 வடிவிலான போட்டிகளில் சிறந்து விளங்கினாலும், ஒருநாள் தொடரில் தடுமாற்றம் அடைந்து வருகிறார். ஐசிசி டி20யின் நம்பர் 1. பேட்ஸ்மேனான இவர், ஒருநாள் போட்டியையும் டி20 பாணியில் பார்ப்பதை இந்த தடுமாற்றத்திற்கு காரணம் என பல முன்னாள் வீரர்கள் கூறிவந்தனர். இதனால், ஒவ்வொரு தொடருக்கு ஏற்ற வகையில் பேட்டிங் செய்ய சில பயிற்சிகளை சூர்யகுமார் யாதவ் எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கிடையில், ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு இன்னும் முழுமையாக 2 மாதங்களே உள்ளதால் அணி வீரர்களை தேர்வு செய்வதில் பிசிசிஐ மும்மரமாக இறங்கி உள்ளது. இதனால், சூர்யகுமார் யாதவ் ஒருநாள் தொடருக்கு சரிப்பட்டு வருவாரா என பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்துரையாடி உள்ளனர். இறுதியில், இன்று நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவை 4வது வீரராக இல்லாமல் 6வது பேட்ஸ்மேனாக களமிறக்கி பார்க்கலாம் என முடிவு செய்துள்ளதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

தனது சொந்த மண்ணில் ஓய்வினை அறிவித்த கிரிக்கெட் நட்சத்திரம்…, இறுதி நாளில் அவர் எடுத்துக்கொண்ட போட்டோ வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here