விக்கெட் கீப்பிங்கில் தோனிக்கு பிறகு இந்திய அணியில் யார் இருப்பார்?? ராகுல் டிராவிட் ஓபன் டாக்!!

0
விக்கெட் கீப்பிங்கில் தோனிக்கு பிறகு இந்திய அணியில் யார் இருப்பார்?? ராகுல் டிராவிட் ஓபன் டாக்!!
விக்கெட் கீப்பிங்கில் தோனிக்கு பிறகு இந்திய அணியில் யார் இருப்பார்?? ராகுல் டிராவிட் ஓபன் டாக்!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 3 வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ள நிலையில், ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பர் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

ராகுல் டிராவிட்:

இந்திய அணியானது, இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை இந்தூரில் விளையாட இருக்கிறது. இந்திய அணி இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே வென்ற நிலையில், ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இன்று களமிறங்க உள்ளது. இந்த போட்டிக்கு முன், இந்திய அணியின் பயிற்சியாளரான, ராகுல் டிராவிட் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

கே எல் ராகுல்-அதியா ஷெட்டி வைரலாகும் திருமண புகைப்படங்கள் இதோ!!

இவர் கூறியதாவது, விக்கெட் கீப்பிங்கில் தோனிக்கு பிறகு இந்த இடத்தை நிரப்ப இந்திய அணியில், பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரை தேடி வருகிறோம் என்று கூறியுள்ளார். மேலும், ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படுவார் என்ற நிலையில், அவருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. இவரை தொடர்ந்து, சஞ்சு சாம்சன், கே எல் ராகுல் உள்ளிட்டோர் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் சிறந்து விளங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும், ஸ்ரீகர் பாரத், இஷான் கிஷன் உள்ளிட்ட இளம் வீரர்கள் இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், டி20 அணியிலும் எடுத்துள்ளோம். ஆனால், மூன்று வடிவ தொடருக்குமான விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு தேவையாகவே உள்ளது என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here