கமலுக்கு வில்லனாகும் லாரன்ஸ் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

சட்டமன்ற தேர்தல் பணிகளில் தற்போது கமல் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கமல் அடுத்து நடிக்கவிருக்கும் விக்ரம் படத்திற்கு வில்லனாக தற்போது ராகவா லாரன்ஸ் தேர்வாகியுள்ளார்.

விக்ரம்:

சினிமா உலகில் உலக நாயகனாக வலம் வருபவர் தான் கமல்ஹாசன். இவர் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகன் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். மேலும் தனது நடிப்பு மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கட்டி வைத்துள்ளார் கமல். தற்போது சினிமாவிற்கு அடுத்த கட்டமாக கமல் அரசியல் களத்தில் தனது கால் தடத்தை பதித்துள்ளார். அதன்படி அவர் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். இதற்காக அவர் தற்போது அரசியல் வேளைகளில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கமலின் பிறந்த நாள் முடிந்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு கமல் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது. அதன்படி கமல் அடுத்ததாக மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் டிவியில் முடிவுக்கு பிரபல சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கான டைட்டில் டீசரும் அப்போது வெளியாகி வைரலானது. தற்போது கமல் அரசியல் வேளைகளில் ஈடுபட்டு வருவதால் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்துள்ளனர். தற்போது இந்த படத்தில் நடிக்கவிருக்கும் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here